வெடிகுண்டு மிரட்டல்: ஜாம்நகரிலிருந்து புறப்பட்டது ரஷிய விமானம்
கோவா சென்று சேர வேண்டிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் சோதனை நடத்தப்பட்டபிறகு, கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.
ஜாம்நகர்: கோவா சென்று சேர வேண்டிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் சோதனை நடத்தப்பட்டபிறகு, கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.
செவ்வாய்க்கிழமை பகல் 1 மணிக்கு கோவா விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
ரஷியாவிலிருந்து கோவா வந்த விமானத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் உடனடியாக ஜாம்நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் மற்றும் பயணிகளின் உடைமைகள் என அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், விமானம் கோவா நோக்கிப் புறப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.