ராகுல் காந்தி 
இந்தியா

ராகுல் காந்தியை நான் கொன்றுவிட்டேன்: சொன்னது அவரே!

ஹரியானாவில் நடைபெற்ற ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு செய்தியாளர்களை சற்றுக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

DIN

ஹரியானாவில் நடைபெற்ற ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு செய்தியாளர்களை சற்றுக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

இந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தால் உங்களது பிம்பம் மாறியிருக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, யாரும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்திருந்தார்.

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தில்லி, உத்தரப்பிரதேசம் என பல மாநிலங்களைக் கடந்து, ஹரியானாவில் நுழைந்து இன்று பஞ்சாபிலிருந்து தொடங்குகிறது.

இந்த நிலையில், ஹரியானாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியை, இந்த நடைப்பயணத்தின் மூலம் உங்கள் பிம்பம் மாறியிருக்கிறதா? இதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறீர்களா? என்று செய்தியாளர் கேட்டார்.

அதற்கு அவர், "ராகுல் காந்தி உங்களது மனதில் இருக்கிறார். நான் அவரைக் கொன்று பல காலம் ஆகிறது. தற்போது நீங்கள் யாரைப் பார்க்கிறீர்களோ அவர் ராகுல் காந்தி இல்லை. ஒருவேளை உங்களால் அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம்" என்று கூறியிருந்தார்.

நீங்கள் இந்து மதத்தைப் பற்றி கொஞ்சம் படியுங்கள். கடவுள் சிவனைப் பற்றி படியுங்கள். சிவபெருமானை பற்றி படியுங்கள்... ஆச்சரியப்பட வேண்டாம். ராகுல் காந்தி பாஜகவின் மனதில் இருக்கிறார்.. என் மனதில் இல்லை. ஏன் இப்படி வியந்து பார்க்கிறீர்கள்? 

"இனி எனக்கு என் பிம்பத்தைப் பற்றி கவலை இல்லை. எனக்கு அதில் எப்போதும் ஆர்வமுமில்லை. அதை மற்றவர்கள் முடிவு செய்ய வேண்டும். நான் என் வேலையைத் தொடருகிறேன்" என்று ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியினரால், ராகுல் காந்தி பல முறை கடும் சொற்களால் தாக்கப்பட்டுள்ளார். பல தலைவர்கள் அவரை பப்பு என்று கூட அழைத்து சிறுமைப்படுத்தினர். இதுபோன்ற தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்தாலும் கூட, ராகுல் காந்தியின் இந்த பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியவர் அமெரிக்காவில் கைது!

ஜிஎஸ்டி குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்

வெளிநாடு வாழ் இந்தியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்: பினராயி விஜயன்

பெரியார் பயன்படுத்திய பிரசார வாகனத்தில் அமர்ந்து மகிழ்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

பெரியார் உலகம்: ரூ. 1.7 கோடி நிதி வழங்கிய திமுக!

SCROLL FOR NEXT