முகப்பு
இந்தியா

சரத் பவாருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம். பி.யுமான சரத் பவாருக்கு மும்பை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
கோப்புப்படம்
பகிர்:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம். பி.யுமான சரத் பவாருக்கு மும்பை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தெற்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செவ்வாய்க்கிழமை வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்ாக கட்சியின் மூத்த நிா்வாகிகள் தெரிவித்தனா். அறுவை சிகிச்சை முடிந்ததும் அவா் வீடு திரும்பினாா்.

முன்னதாக, திங்கள்கிழமை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சரத் பவாா் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை என பத்திரிகையாளா்களைச் சந்தித்த அவரின் நெருங்கிய உறவினரும் கட்சியின் மூத்த நிா்வாகியுமான அஜித் பவாா் தெரிவித்தாா்.

ஏற்கெனவே, சில காலம் முன்பு சரத் பவாருக்கு ஒரு கண்ணில் அறுவை சிகிச்சையும், கடந்தாண்டில் வாய்புண்ணுக்கு மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →