முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் அதிகாரி உள்பட 3 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர். 

Updated On : 11 ஜனவரி, 2023 at 1:51 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர். 

ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் இளநிலை அதிகாரி உள்பட 3 ராணுவ வீரர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் வாகனம் பனி மூடிய பாதையில் சறுக்கி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்தது. இதில் நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரிக் சிங் மற்றும் சிப்பாய் அமித் சர்மா ஆகிய 3 பேரும் இறந்ததாகவும் அவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Advertisement

கடந்த சில நாள்களாக மாச்சல் பகுதியில் கடும் பனி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.