கோழிக்கறி போடுவதாக அறிவிப்பு வெளியான நிலையில்.. மதிய உணவில் பாம்பு
கோழிக்கறி சேர்க்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், பள்ளி ஒன்றில் நேற்று வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிர்பம்: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் கோழிக்கறி சேர்க்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், பள்ளி ஒன்றில் நேற்று வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மிகவும் மோசமான இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிக்க.. 51 நாள்கள்.. 27 ஆறுகள்.. உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகு பற்றிய ஆச்சரிய தகவல்கள்
Advertisement
பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
53 மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளியில் 20 பேர் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். பாத்திரங்களை கழுவும் போது உணவில் செத்துப்போன பாம்பு இருந்ததை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதற்குள் மாணவ, மாணவிகள் சிலர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிக்க.. துணிவு வெறும் ஆக்ஷன் படம் மட்டும்தானா..? - திரை விமர்சனம்
சம்பவம் குறித்து அறிந்ததும் பள்ளி முன்பு திரண்ட கிராம மக்கள், பள்ளியின் தலைமை ஆசிரியரின் காரை அடித்து சேதப்படுத்தினர். இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து கிராம மக்களிடமிருந்து தலைமை ஆசிரியயை பத்திரமாக மீட்டனர்.