அயோத்தி ராமா் கோயில்: 60% கட்டுமானப் பணிகள் நிறைவு 
இந்தியா

அயோத்தி ராமா் கோயில்: 60% கட்டுமானப் பணிகள் நிறைவு

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் இதுவரை 60 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும், முதல் தளம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தயாராகிவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் இதுவரை 60 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும், முதல் தளம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தயாராகிவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தி ராமர் கோயிலின் கீழ்தளத்தில் இதுவரை கிட்டத்தட்ட 50 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.  2024ஆம் ஆண்டில் மகர ராசிக்குள் சூரியன் நுழைகிறார். அப்போது, இந்தக் கோயிலின் கருவறைக்குள் ராமர் வந்தமர்வார் என்று ஸ்ரீராம் ஜான்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய்தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலின் கருவறை முதல் கீழ்தளப் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக ராஜஸ்தான் மநிலம் பன்ஸி பஹர்பூர் பகுதிகயிலிருந்து இளஞ்சிவப்பு நிறக் கற்கள் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

முன்னதாக, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ராமா் கோயில், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குள் பக்தா்களின் தரிசனத்துக்காக தயாராகிவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாயும் ஒளி... பாயல் தாரே!

வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறது பாஜக: பிரஷாந்த் கிஷோர்

மாலை மயக்கம்... சஞ்சனா திவாரி!

மகளிர் உலகக் கோப்பை: ஆஸி.க்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

மஞ்சள் பதுமை... நிகிலா விமல்!

SCROLL FOR NEXT