இந்தியா

ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வு வினாத் தாள் கசிவு: குற்றவாளி வீடு தரைமட்டம்

DIN


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இரண்டாம் நிலை ஆசிரியர் தேர்வுக்கான வினாத் தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பூபேந்திர சரணின் வீட்டின் சட்ட விரோதமாக கட்டப்பட்ட பகுதிகள் இடிக்கப்பட்டது, 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் இரண்டாம் நிலை ஆசிரியர் தேர்வுக்கான வினாத் தாள் கசிவு விவகாரத்தில் 4 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியான, அரசால் தேடப்பட்டு வரும் சரணின் வீட்டின் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பகுதிகள் சட்ட நடைமுறைகளின்படி இடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்க பதிவில் பதிவிட்டுள்ளார். 

மாநில இளைஞர்களின் வருங்காலத்துடன் விளையாடும் தீய எண்ணம் கொண்ட நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை  ராஜஸ்தான் அரசு தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, முதல்வரின் உத்தரவை அடுத்து முக்கிய குற்றவாளியான பூபேந்திர சரணின் ஜெய்ப்பூரில் உள்ள வீட்டின் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பகுதிகளை, பிறரது சொத்துகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அதிக கவனமுடன் ஜெய்ப்பூர் வளர்ச்சி கழகம் இடித்து தள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT