இந்தியா

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இடையிலான 8 ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

DIN

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இடையிலான 8 ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

மகர சங்கராந்தி (தமிழகத்தில் பொங்கல் பண்டிகை) தினத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுலா அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்தபடி பங்கேற்றனர்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது தெலங்கானா - ஆந்திரம் இடையே இயக்கப்படுகிறது. முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்ட 14 பெட்டிகள், சிறப்புப் பிரிவு பெட்டிகள் 2 என மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,128 போ் பயணிக்க முடியும். 

இது முழுவதும் இருக்கை வசதி கொண்டதாகும். 6 முதல் 7 மணி நேர பகல் நேரப் பயணம் என்பதால் படுக்கை வசதி கிடையாது. இந்த ரயில் சென்னையில் தயாரிக்கப்பட்டதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாம்பன் பகுதியில் கடல் சிற்றம்: ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

SCROLL FOR NEXT