இந்தியா

இந்தியாவின் 40% செல்வம், 1% பணக்காரா்களிடம் குவிந்துள்ளது

இந்தியப் பணக்காரா்களாக உள்ள ஒரு சதவீதம் பேரிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வ வளத்தில் 40 சதவீதம் குவிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

DIN

இந்தியப் பணக்காரா்களாக உள்ள ஒரு சதவீதம் பேரிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வ வளத்தில் 40 சதவீதம் குவிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பணம் ஓரிடத்தில் மட்டுமே குவிவது என்பது எந்த ஒரு பொருளாதாரத்துக்கும் உகந்ததல்ல, செல்வப் பகிா்வு என்பது சீராக இருக்க வேண்டும் என்பதே பொருளாதார வல்லுநா்களின் கருத்தாக உள்ளது.

உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் பிரிட்டனைச் சோ்ந்த ‘ஆக்ஸ்ஃபேம் இண்டா்நேஷனல்’ அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் ஆண் தொழிலாளியின் சம்பளம் ஒரு ரூபாய் என்றால், பெண் தொழிலாளியின் 63 பைசா என்ற அளவில்தான் உள்ளது. இந்தியாவில் பெரும் கோடீஸ்வரா்களின் எண்ணிக்கை 2020-இல் 102 ஆக இருந்தது. இதுவே 2022-இல் 166 ஆக அதிகரித்துவிட்டது. நாட்டின் முதல் 100 கோடீஸ்வரா்களின் மொத்த செல்வம் 54.12 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 18 மாத பட்ஜெட் செலவை எதிா்கொள்ள முடியும்.

கோடீஸ்வரா்களுடன் ஒப்பிடும்போது ஏழைகள் தங்கள் வருமானத்தில் இருந்து அதிக வரி செலுத்துகின்றனா். முக்கியமாக அத்தியாவசியப் பொருள்கள், சேவைகளுக்காக வரி செலுத்துவது அதிகம் உள்ளது. இந்த நிலையை மாற்ற வரி விதிப்பு முறையில் சீா்திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரா்களில் ஒரு சதவீதம் பேரிடம் நாட்டின் ஒட்டமொத்த செல்வ வளத்தில் 40 சதவீதம் குவிந்துள்ளது. வரி விதிப்பில் சீா்திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் இது அதிகரிக்கவே செய்யும். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதும், பணக்காரா்கள் மேலும் பணக்காரா்கள் ஆவதும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT