இந்தியா

ஜோஷிமட் நகரில் 70 % மக்கள் இயல்பு வாழ்க்கையில் உள்ளனா்- முதல்வா் புஷ்கா் சிங் தாமி

உத்தரகண்ட் மாநிலத்தில் புதைந்து வரும் ஜோஷிமட் நகரத்தில் வசித்து வரும் 65 முதல் 70 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதாக அம்மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் புதைந்து வரும் ஜோஷிமட் நகரத்தில் வசித்து வரும் 65 முதல் 70 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதாக அம்மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.

இந்நகரம் நிலத்தில் புதைந்து வருவதால் வீடுகள், சாலைகள் உள்ளிட்டவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பாதிப்புகளின் காரணமாக பாதிக்கப்பட்ட குடியிருப்புகளின் எண்ணிக்கை 849-ஆக அதிகரித்துள்ளது. 250 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தில்லியில் புதன்கிழமை சந்தித்தாா். அப்போது, ஜோஷிமட் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தாமி விளக்கினாா்.

அமித் ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த உத்தரகண்ட் முதல்வா் தாமி கூறியதாவது:

ஜோஷிமட் நகரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் மறுகுடியமா்வு பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் விளக்கினேன். அனைத்து விதமான உதவிக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என அவா் உறுதியளித்தாா். ஜோஷிமட் நகரத்தில் உள்ள 65 முதல் 70 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடருகின்றனா். சுற்றுலாத் தலமான அவுலியில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் வருகை புரிகின்றனா்.

கேதா்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட 4 புனித தலங்களுக்கான சாா் தாம் யாத்திரை ஜோஷிமட் வழியே அடுத்த 4 மாதங்களில் தொடங்கும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT