முகப்பு
இந்தியா

சுருக்குமடி வலைக்கு தடை விதித்தது ஏன்? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

சுருக்குமடி வலையை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:44 PM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: சுருக்குமடி வலையை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது.

கடல்வளத்தை பாதுகாக்கவும் பாரம்பரிய முறை மீனவர்கள் நலன் கருதியும் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.

சில மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள சுருக்குமடி வலைக்கு தமிழகத்தில் மட்டும் தடை விதித்திருப்பது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அதற்கு, கடல்வளம், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே தடை விதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →