கோப்புப்படம் 
இந்தியா

நண்டு படைத்து வழிபட்டால் துன்பங்கள் தீரும்: எந்த கோயிலில் தெரியுமா?

குஜராத்தின் சூரத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் நண்டுகளை படைத்து வழிபட்டால் குறிப்பாக காது வலி தொடர்பான பிரச்னைகள் குணமாவதாக நம்பப்படுகிறது.

DIN

குஜராத்தின் சூரத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் நண்டுகளை படைத்து வழிபட்டால் குறிப்பாக காது வலி தொடர்பான பிரச்னைகள் குணமாவதாக நம்பப்படுகிறது.

இது போன்று வழிபடுவதால் தங்களது துயரங்கள் நீங்குவதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

இது குறித்து கோயில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நேற்றைய தினம் (ஜனவரி 18) மகர சங்கராந்திக்கு அடுத்து வரும் தினம். இந்த தினம் மிகவும் மங்களகரமான நாள். இதனை உத்தராயன் எனவும் கூறுவர். இதனால், நேற்றைய தினம் நண்டுகள் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ராம்நாத் மகாதேவ் கோயிலில் சிவலிங்கத்துக்கு முன் நண்டுகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதன் மூலம், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதாக மக்கள் நம்புகின்றனர். மேலும், குறிப்பாக காது தொடர்பான பிரச்னைகள் குணமாவதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் பலரும் மற்ற நாட்களில் பூக்கள், இலைகள் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த நாளில் நண்டுகளை வைத்து வழிபாடு நடத்த ஆவலாக உள்ளனர் என்றார். 

தபதி நதியில் ராமர் செல்லும் போது அவரது பாதத்தில் நண்டு ஏறியதாகவும், அதனை ராமர் ஆசிர்வதித்ததாகவும் நம்பப்படுகிறது. இதனால், நண்டுகளை படைத்து வழிபடுவது முக்கிய வழக்கமாக மாறிவிட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... வரலாறு படைத்த மெஸ்ஸி!

கூர்விழி... தர்ஷா!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

SCROLL FOR NEXT