மக்களைத் தேடி மருத்துவம்: மா. சுப்பிரமணியன் விளக்கம் 
இந்தியா

மக்களைத் தேடி மருத்துவம்: மா. சுப்பிரமணியன் விளக்கம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்காக ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

DIN


சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்காக ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் அவர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர், அரசியல்வாதிகள் செல்லாத இடங்களுக்குக் கூட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சென்றடைந்திருக்கிறது.

இந்த திட்டத்துக்காக தமிழக அரசால், ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பயனாளிகளின் பட்டியலை வெளியிடத் தயார் என்றும் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், மத்திய அரசாலேயே பாராட்டப்பட்ட திட்டம். இதனை எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் தவறான புள்ளிவிவரங்களை தந்தது கண்டிக்கத்தக்கது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியிருந்தார். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்துகள் வழங்கப்படுவதில்லை என்றும் பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT