இந்தியா

வேங்கைவயல் வழக்கு: அரசு தரப்பில் அறிக்கை தாக்கல்

DIN


வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடியிருப்புக்கு குடிநீா் விநியோகிக்கப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கடந்த டிசம்பா் டிச. 26-ல் மனிதக்கழிவு கலந்திருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக வெள்ளனூா் காவல் நிலையத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏடிஎஸ்பி தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள், 4 காவல் ஆய்வாளா்கள், 4 உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 11 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.

காவல் துறையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று எதிர்ப்புகள் எழுந்தது. இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழ்நாடு காவல்துறைத் தலைவா் சைலேந்திரபாபு கடந்த ஜன. 14ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி வழக்கு பதிவு செய்யப்ட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT