இந்தியா

மேற்கு வங்கத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் கைது!

DIN

மேற்கு வங்காளத்தில் கோரிபரி வனப் பகுதியில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை போலீஸார் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் அசித் ஓரான், அனில் ஓரான் மற்றும் புனிலால் நாகாச்சியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அசித் மற்றும் அனில் புல்பாரி பகுதியில் வசிப்பவர்கள். புனிலால் கரிதுராவை சேர்ந்தவர். 

கோரிபரி பகுதியில் உள்ள கோஷ்புகூர் வனப்பகுதியில் வாகனம் கைது செய்யப்பட்டது. கடத்தப்பட்ட யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.1 கோடியாகும். 

கைது செய்யப்பட்ட மூவரும் எந்த ஆவணத்தையும், தந்தங்கள் தொடர்பான எந்த தகவலையும் அளிக்கவில்லை. தற்போது மூவரிடமும், அவர்களது மற்ற கூட்டாளிகளைக் கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடக்கு வங்காளத்தில் உள்ள இந்த குறிப்பிட்ட இடம் வனவிலங்கு கடத்தலின் மையமாக மாறியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT