இந்தியா

நாட்டிலேயே முதல்முறையாக கேரள கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுமுறை கட்டாயம்

DIN

நாட்டிலேயே முதல்முறையாக உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அன்றைய நாள்களில் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதை உணர்ந்து விடுமுறையை வழங்க வேண்டும் எனும் குரல் பரவலாக எழுந்து வருகிறது. அந்த குரலுக்கு வலுசேர்க்கும் விதமாக நாட்டிலேயெ முதன்முதலாக மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேரள கல்வி நிலையங்களில் மாணவிகளின் வருகைப் பதிவு 73 சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதால் கட்டாய வருகைப் பதிவான 75 சதவிகித்தை பூர்த்தி செய்யமுடியாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் மாணவிகள் விடுமுறை எடுப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மாநில அரசு இத்தகைய தினங்களில் மாணவிகளின் நலன்கருதி கட்டாய விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே கொச்சின் பல்கலைக்கழகத்தில் இந்த அறிவிப்பு நடைமுறையில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பிந்து தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டிலேயே முதல்முறையாக கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT