இந்தியா

மோடி பற்றிய கட்டுரையைப் பகிர்ந்தவர் நீதிபதியாகக் கூடாதா? கொலீஜியத்தின் ஓபன் டாக்

DIN


பிரதமர் மோடி பற்றிய கட்டுரையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் நீதிபதியாகக் கூடாதா? என்று மத்திய அரசுக்கு கொலீஜியம் நேரடியாக கேள்வியை எழுப்பியிருக்கிறது.

கொலீஜியம் பரிந்துரைத்த 3 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்த நிலையில், மத்திய அரசுக்கும் - நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்துக்கும் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தில், நீதிபதிகள் சஞ்சய் கிஷ கௌல், கே.எம். ஜோசப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

பொதுவாக, கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்காததற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த காரணங்கள் எதுவும் பொதுவெளியில் தெரியவராது.

ஆனால், முதல் முறையாக, நீதிபதிகளுக்கான பரிந்துரைகளை நிராகரித்து, மத்திய அரசு தெரிவிக்கும் காரணங்களை கொலீஜியம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட போட்டு உடைத்துள்ளது.

அதன்படி, ஏற்கனவே தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்குரைஞர் சோரப் கிர்பாலை நியமிக்க கொலீஜியம் அளித்த பரிந்துரையை நிராகரித்த மத்திய அரசு, அவர் தன்பாலின உறவில் இருப்பவர் என்று தெரிவித்திருந்ததை கொலீஜியம் பொதுவெளியில் தெரிவிக்க அது பேசுபொருளாகி இன்னமும் பேசிக் கொண்டிருக்கும் நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில்தான், மூத்த வழக்குரைஞா் ஆா்.ஜான் சத்யனை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜியம் தனியாக மறுபரிந்துரை செய்துள்ளது.

அவரது பெயரை கொலீஜியம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பரிந்துரைத்திருந்தது. ஆனால், சமூக வலைதளத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அவரது பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில், அவரை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. பிரதமா் மோடி தொடா்பாக ஏற்கெனவே வெளியான செய்தியை மட்டுமே அவா் பகிா்ந்ததாகத் தெரிவித்துள்ள கொலீஜியம், இது நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான விதிகளை மீறிய செயல் அல்ல என்றும் விளக்கமளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT