முகப்பு
இந்தியா

பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய மல்யுத்த வீரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய வீரர்களுக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:47 PM
தில்லி உயர்நீதிமன்றம்​
பகிர்:

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய வீரர்களுக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

டபிள்யுஎஃப்ஐ (இந்திய மல்யுத்த சம்மேளனம்) தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளிப்பதாகவும், துன்புறுத்துவதாகவும் மல்யுத்த வீரர்கள் கடந்த வாரம் குற்றச்சாட்டு எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் சரண் மறுத்த நிலையில், குற்றச்சாட்டு எழுப்பிய வீரர்களுக்கு எதிராக அவரின் வீட்டு பணியாளர் விக்கி என்பவர் மூலம் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், பிரிஜ் பூஷன் சரணின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக பொதுவெளியில் பாலியல் குற்றச்சாட்டை பொய்யாக வைத்ததற்கு மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிஜ் பூஷன் சரண் மற்றும் மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மத்திய அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தை கைவிட்டனர்.

பாலியல் உள்ளிட்ட வீரர்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் தரப்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.