இந்தியா

தில்லி மேயர் தேர்தல் 2வது முறையாக ஒத்திவைப்பு!

DIN

மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வதற்கான தில்லி மேயர் தேர்தல் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் இன்று காலை அவை தொடங்கியதும் நியமன உறுப்பினர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

அப்போது, ஆம் ஆத்மி கட்சியினரின் தொடர் அமளி காரணமாக மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியினரின் தொடர் அமளி காரணமாக மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சித் தோ்தலுக்குப் பிறகு கூடிய முதல் சபையிலேயே மேயா் மற்றும் துணை மேயா் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினா்களுக்கு இடையே அமளி ஏற்பட்டது. 

இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக முதல் கூட்டத்தில் மேயா், துணை மேயா் தோ்ந்தெடுக்கப்படவில்லை.

.தில்லியில் டிசம்பா் 4-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. டிசம்பா் 7-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜகவை வீழ்த்தி, ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வென்று சபையை வழிநடத்த உரிமை கோரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT