இந்தியா

நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: தில்லியில் அதிர்வுகள்!

DIN


புதுதில்லி: நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்திய தலைநகர் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டன.

நேபாளத்தில் இன்று பிற்பகல் 2:28 மணியளவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் இருந்து கிழக்கே 148 கி.மீ தொலைவில் உள்ளது.

இதனிடையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தில்லி-என்சிஆர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தின் போது வீட்டில் மின்விசிறிகள் மற்றும் வீட்டுப் பொருள்கள் அசையும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான வீடியோக்களை சமூக வலைதளங்களில்  பகிர்ந்துள்ளனர்.

அதே வேளையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

SCROLL FOR NEXT