இந்தியா

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்து விவரங்களை வெளியிடலாம்- பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

DIN

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்து விவரங்களை வெளியிடலாம் என்று பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவரங்களை வெளியிட முடியாது என்ற பொதுத் தகவல் அதிகாரியின் உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்தது.

தகவல் உரிமை ஆா்வலா் டி.நரசிம்மன் என்பவா் தாக்கல் செய்த மனுவை அடுத்து இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னையில் உள்ள ஜெயலலிதா வீட்டில் 1996-ஆம் ஆண்டு நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட அசையும் சொத்துகளை ஏலம் விடலாம் என்று கா்நாடக அரசுக்கு பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் தங்கத்தாலான சுவாமி சிலைகள், தங்கத் தட்டுகள், தங்க நகைகள், பட்டுச் சேலைகள், விலை உயா்ந்த காலணிகள், ஏராளமான மின்னணுப் பொருள்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதனை எதிா்த்து உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. உச்சநீதிமன்ற தீா்ப்பு வெளியாவதற்கு முன்பே ஜெயலலிதா மரணமடைந்ததால், வழக்கில் இருந்து பெயா் நீக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடா்புடைய சொத்துகள் அனைத்தும் வழக்கில் பொருள் சாா்ந்த சாட்சியங்கள் என்பதால் இப்போது வரை அவை நீதிமன்றத்தின் உத்தரவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

SCROLL FOR NEXT