புனே: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மரணத்தில், திடீர் திருப்பமாக, அவர்களை திட்டமிட்டுக் கொலை செய்தக் குற்றத்துக்காக நான்கு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனே மாவட்டம் தௌந்த் அருகே ஓடிக் கொண்டிருக்கும் பிமா ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
முதலில், தற்கொலையாகக் கருதப்பட்ட இந்த சம்பவத்தில், மரணம் அடைந்த 50 வயது நபரின் உறவினர்கள் நான்கு பேர் கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவரின் மகன் சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். ஆனால், அது சாலை விபத்து அல்ல, தனது உறவினர்தான் கொலை செய்துவிட்டதாக அவர் கருதினார். இதனால், அந்த நபர் தனது மூன்று சகோதரர்களுடன் இணைந்து திட்டம் தீட்டி, ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுள்ளது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும், ஜனவரி 18ஆம் தேதி, 50 வயது நபர், அவரது மனைவி, மகள், மருமகன், மூன்று பேரப்பிள்ளைகளை பிமா ஆற்றில் தள்ளிக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.