இந்தியா

20 ரூபாய் மருத்துவருக்கு பத்ம ஸ்ரீ விருது!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் எம்.சி.தவாருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் எம்.சி.தவாருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கிய 106 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் தவாருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ரூபாய் மருத்துவர் என அனைவராலும் அழைக்கப்படும் மருத்துவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கு மத்தியப் பிரதேச மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

1946-ல் பிறந்த தவார், 1987-ல் மருத்துவப் படிப்பை முடித்தார். 1971-ல் இந்தியா - பாகிஸ்தான் போரின்போது ராணுவத்தில் பணிபுரிந்தார். ஒரு வருடம் ராணுவத்தில் பணியாற்றினார். அதன் பிறகு 1972 முதல் ஜபல்பூரில் மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சிகிச்சை அளித்து வருகிறார். ஆரம்பத்தில் 2 ரூபாய் கட்டணமாகப் பெற்றுக்கொண்ட தவார், தற்போது ரூ.20 மட்டுமே பெற்றுக்கொள்கிறார். 

பத்மஸ்ரீ விருது பற்றி தவார் கூறும்போது,

மக்களின் வாழ்த்துகளால் தான் எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது, மக்களுக்குச் சேவை செய்வதே என் நோக்கம். அதனால் தான் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

SCROLL FOR NEXT