கோப்புப்படம் 
இந்தியா

திரிபுரா: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.  

DIN

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. 

திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான 13-ஆவது சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் என்று அண்மையில் தோ்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மாா்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், அவற்றின் மீதான பரிசீலனை ஜனவரி 31-ஆம் தேதி நடைபெறுகிறது. 

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற பிப்ரவரி 2-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.  தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இடதுசாரி முன்னணி 47 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து 13 இடங்களை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது.

இந்த நிலையில் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. காங்கிரஸ் 4 தொதிகளுக்கு கூடுதலாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், அந்த இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே நட்புரீதியான போட்டி ஏற்படும் சூழல் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு

ஆம்பூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

92 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT