இந்தியா

அதானி குழுமத்தில் மேலும் ரூ.300 கோடிபங்குகளை வாங்குகிறது எல்ஐசி

அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அந்த குழுமத்தில் மேலும் ரூ.300 கோடி பங்குகளை எல்ஐசி வாங்க முடிவு செய்துள்ளது.

DIN

பங்குச் சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபடுவதாக வெளியான ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையைத் தொடா்ந்து அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அந்த குழுமத்தில் மேலும் ரூ.300 கோடி பங்குகளை எல்ஐசி வாங்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பாக அதிகரித்துக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்ப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனைத் தொடா்ந்து, அதானி குழுமப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. அக்குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ. 4.17 லட்சம் கோடி வரை வீழ்ச்சியடைந்தது.

நாட்டின் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களிலும் ஏற்கெனவே ரூ.28,400 முதலீடு செய்திருந்தது. அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கைக்குப் பிறகு எல்ஐசி நிறுவனமும் கடும் இழப்பைச் சந்தித்துள்ளதாக தகவல் பரவியது.

ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் எல்ஐசியிடம் இருந்த அதானி குழுமப் பங்குகள் மதிப்பு ரூ.72,200 கோடியாக இருந்தது. ஆய்வறிக்கை வெளியாகி பங்குகள் சரிவைச் சந்தித்த நிலையில் மதிப்பு ரூ.55,700 கோடியாக குறைந்துள்ளது. எனினும், அதானி குழும பங்குகளில் முதலீடு செய்ததை தொகையைவிட இப்போதைய மதிப்பு ரூ.27,300 கோடி கூடுதலாகவே உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏனெனில், அதானி பங்குகள் மிகவும் குறைவான விலையில் இருந்தபோதே அதில் எல்ஐசி முதலீடு செய்துள்ளது.

இதனிடையே, அதானி குழுமம் அண்மையில் அறிவித்த ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்கு வெளியீட்டில் மேலும் ரூ.300 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கவும் எல்ஐசி முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT