முகப்பு
இந்தியா

மார்ச் 9-ல் நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல்!

நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2023 at 4:37 PM
குடியரசுத் தலைவர் மாளிகை (கோப்புப் படம்)
பகிர்:


நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராகவுள்ள வித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் மார்ச் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்றார். 

அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதைபொட்டி, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வது குறித்த தேர்தலுக்கான அறிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஆலோசனைக்குப் பிறகு இன்று (ஜன. 30) வெளியிட்டுள்ளது. 

Advertisement

அதன்படி, மார்ச் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் மார்ச் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.