இந்தியா

திரிபுரா பேரவைத் தோ்தல்: திரிணமூல் காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

DIN

திரிபுரா பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த ஜன.21-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், ஜன.30-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. மாா்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அந்த மாநிலத்தில் பாஜகவைத் தோற்கடிக்கும் நோக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கைகோத்துள்ளன. இக்கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இணையுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தேர்தலில் 60 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது.

இந்த நிலையில் பேரவைத் தேர்தலுக்கான 22 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி பிப்ரவரி 6-ஆம் தேதி திரிபுராவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டு தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT