இந்தியா

ஏற்றுமதிக்கு மத்திய பட்ஜெட்டில் கவனம் தேவை: ப.சிதம்பரம்

DIN


பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதி சரிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பட்ஜெட்டில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு ஜன.31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதனைத் தொடர்ந்து நாளை 2023 -2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்லமா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். 

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது,

உலகளாவிய பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் பற்றாக்குறை உள்ளிட்டவற்றில் பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT