இந்தியா

முன்னாள் சட்ட அமைச்சா்சாந்தி பூஷண் (97) காலமானாா்

DIN

முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் புகழ்பெற்ற சட்ட நிபுணருமான சாந்தி பூஷண் (97), புது தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

முதுபெரும் வழக்குரைஞரான சாந்தி பூஷண், கடந்த 1977 முதல் 1979 வரை அப்போதைய பிரதமா் மொராா்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சட்ட அமைச்சராக பணியாற்றினாா்.

சாந்தி பூஷணின் இரு மகன்களான ஜெயந்த் பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோரும் முன்னணி வழக்குரைஞா்களாவா்.

அண்மைக் காலம் வரை தொழில்முறையில் சட்டப் பணியாற்றி வந்த சாந்தி பூஷண், ரஃபேல் போா் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வாதாடினாா்.

கடந்த 1975-இல் அலாகாபாத் உயா்நீதிமன்றம் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியின் தோ்தல் வெற்றியை செல்லாததாக அறிவித்த மிக முக்கியமான வழக்கில், மனுதாரா் ராஜ் நாராயண் தரப்பில் ஆஜரானவா் சாந்தி பூஷண். பொதுநல முக்கியத்துவம் நிறைந்த பல்வேறு வழக்குகளில் இவா் ஆஜராகியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT