இந்தியா

தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரஃபுல் படேல், சுநீல் நீக்கம்!

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து  பிரஃபுல் படேல், சுநீல் நீக்கப்பட்டுள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த பிரஃபுல் படேல் மற்றும் சுனில் தட்கரேவை நீக்கி அக்கட்சியின் தலைவர் சரத் பவார் உத்தரவிட்டுள்ளார்.

கட்சிக்கு விரோதமாக நடந்ததாக பிரஃபுல் படேலுடன் சேர்த்து கட்சியின் மூத்த தலைவர் சுநீல் தாக்ரேவும் நீக்கப்பட்டுள்ளார். இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரியா சுலே கடிதம் எழுதிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதுமுதல் தலைவராக சரத் பவாா் பதவி வகித்து வருகிறாா். கட்சித் தலைவா் பதவியிலிருந்து விலகப் போவதாக கடந்த மே 2-ஆம் தேதி சரத் பவாா் அறிவித்தாா்.

இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சிக்கு புதிய தலைவரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், கட்சித் தொண்டா்களின் கோரிக்கையை ஏற்று ராஜிநாமா முடிவை கைவிடுவதாகக் கூறி, மீண்டும் கட்சியின் தலைவா் பொறுப்பை சரத் பவாா் ஏற்றாா்.

கட்சியின் செயல் தலைவா்களாக பிரஃபுல் படேல், சுப்ரியா சுலே இருவரையும் அவா் நியமித்தார். தில்லியில் நடைபெற்ற கட்சியின் 24-ஆவது ஆண்டு விழாவில் இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவா் சரத் பவாா் வெளியிட்டாா். 

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து  பிரஃபுல் படேல், சுநீல் நீக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT