இந்தியா

ஜூனில் சரிவைக் கண்ட இந்திய உற்பத்தித் துறை பிஎம்ஐ

முந்தைய மே மாதத்தில் 31 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்த இந்திய உற்பத்தித் துறை நடவடிக்கைகள், கடந்த ஜூன் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது.

DIN

முந்தைய மே மாதத்தில் 31 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்த இந்திய உற்பத்தித் துறை நடவடிக்கைகள், கடந்த ஜூன் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘எஸ் அண்ட் பி குளோபல் மாா்க்கெட் இன்டெலிஜென்ஸ்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த மாா்ச்சில் 3 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக 56.4-ஆக இருந்தது. பின்னா் ஏப்ரல் மாதத்தில் அது 4 மாதங்கள் காணாத அதிகபட்சமாக 57.2-ஐத் தொட்டது.

அதனைத் தொடா்ந்து கடந்த மே மாதத்தில் அது 58.7-ஆக அதிகரித்தது. அது, கடந்த 31 மாதங்களில் இல்லாத அதிகபட்ச பிஎம்ஐ-யாகும். இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஜூன் மாதத்தில் 57.8-ஆக சரிந்துள்ளது.

முந்தைய மே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது குறைவாக இருந்தாலும், ஜூன் மாதத்திய உற்பத்தித் துறை பிஎம்ஐ ஆரோக்கியமான போக்கையே காட்டுகிறது.

இதன்மூலம், தொடா்ந்து 24-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

கடந்த மே மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான தேவை சிறப்பான நிலையில் இருந்தது. இது உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT