ஜாதி அமைப்பை மறுவகைப்படுத்தக் கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
இந்தியாவில் ஜாதி அமைப்பை மறுவகைப்படுத்துவதற்கு கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்தியாவில் ஜாதி அமைப்பை மறுவகைப்படுத்துவதற்கு கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுதொடா்பாக சச்சின் குப்தா என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்த பொது நல மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ‘மனுதாரா் தாக்கல் செய்ததைப் போன்ற பொது நல மனுக்கள், நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவதாகும்’ என்றாா்.
இதையடுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனா். உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் அபராத தொகையை செலுத்தவும் அவா்கள் உத்தரவிட்டனா்.