இந்தியா

சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு!

DIN

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம்(ICAI) நடத்தும் சி.ஏ. இடைநிலை மற்றும் இறுதித்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. 

கடந்த மே மாதம் சி.ஏ.(சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்) படிப்புகளுக்கான இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. 

இதையடுத்து இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை  http://icai.nic.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

இந்த தேர்வில் ஆமதாபாத் பகுதியைச் சேர்ந்த அக்ஷய் ரமேஷ் ஜெயின் என்பவர் 800க்கு  616 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த கல்பேஷ் ஜெயின் என்ற மாணவன் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பிரகார் வர்ஷ்னே 3-ம் இடம் பெற்றுள்ளார். இறுதித் தேர்வில் மொத்தம் 13,430 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

சி.ஏ. இடைநிலைத் தேர்வில் கோகுல் சாய் ஸ்ரீகர் என்பவர் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். நூர் சிங்லா 2-ம் இடத்தையும் காவ்யா சந்தீப் கோத்தாரி என்பவர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆடலுடன் பாடல்.. வேதிகா!

சிக்கிமில் நிலச்சரிவு! சுற்றுலா சென்ற பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்

தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நேரமிது: இலங்கை கேப்டன்

தொடரும் ரயில் விபத்துகள்..அப்பாவி மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? -ராகுல் கேள்வி

ஊர் சுற்றக் கிளம்பிய சமந்தா!

SCROLL FOR NEXT