முகப்பு
இந்தியா

ஓணம்: வளைகுடா நாடுகளுக்குத் தனி விமானங்களை இயக்கக் கோரிக்கை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளத்துக்கு தனி விமானங்களை இயக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். 

Updated On : 5 ஜூலை 2023, 9:46 pm IST
பினராயி விஜயன் (கோப்புப் படம்)
பகிர்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளத்துக்கு தனி விமானங்களை இயக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். 

கேரளத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஆகஸ்ட் 28 முதல் 31ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

கேரளத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பண்டிகைக்கு வருவதற்கு ஏதுவாக தனி விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார். 

Advertisement

Advertisement

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை வளைகுடா நாடுகளில் இருந்து கேரளத்துக்கு தனி விமானங்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.