ஜம்மு-காஷ்மீரில் தேசிய கீதத்தை அவமதித்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 25-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட நிலையில், ஒரு சிலர் எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தனர்.
இந்நிலையில், அவர்களை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்தனர். மேலும், தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்பதை உறுதி செய்யத் தவறிய ஒரு சில காவல் துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 14 பேரும் மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.