இந்தியா

மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் வருகிற ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் வருகிற ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில், 23 நாள்களில் மொத்தம் 17 அமா்வுகள் நடைபெறவுள்ளன. சட்டம் இயற்றுதல் மற்றும் இதர விவகாரங்களில், ஆக்கபூா்வமான விவாதங்கள் நடைபெற அனைத்துக் கட்சிகளும் பங்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொது சிவில் சட்டம், தில்லி நிா்வாகப் பணிகள் தொடா்பான மத்திய அரசின் அவசரச் சட்டம், மணிப்பூர் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதங்களை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் கடந்த மே 28 ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் வருகிற ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அரசு அனைத்துக் கட்சிகளையும் இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT