அமர்நாத் குகைக் கோயில் 
இந்தியா

மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் 

ஜம்முவில் மோசமான வானிலை நிலவுவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

ஜம்மு: ஜம்முவில் மோசமான வானிலை நிலவுவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அமர்நாத்தில் உள்ள 5000 ஆண்டுகள் பழமையான பனிலிங்கத்தை தரிசனம் செய்ய வருடந்தோறும் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். 

அந்தவகையில் இந்த ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து, புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று ஜம்முவில் மோசமான வானிலை நிலவுவதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில்  இதுவரை 84,768 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.  இன்று 17,202 பேர்  யாத்திரை மேற்கொள்ள இருந்த நிலையில் சீரற்ற வானிலை நிலவுவதால் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜம்மு பகுதியில் வானிலை சீரானதும் மீண்டும் யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT