இந்தியா

ஏசி ரூம்களில் அமர்ந்து திட்டங்கள் வகுத்தது முந்தைய அரசுகள்: பிரதமர் மோடி

மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைகிறதா என்ற கள நிலவரத்தை பார்க்காமல் முந்தைய அரசுகள் ஏசி ரூம்களில் அமர்ந்துகொண்டு நலத்திட்டங்களை உருவாக்கியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

DIN

மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைகிறதா என்ற கள நிலவரத்தை பார்க்காமல் முந்தைய அரசுகள் ஏசி ரூம்களில் அமர்ந்துகொண்டு நலத்திட்டங்களை உருவாக்கியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது நாடாளுமன்ற தொகுதியான வாராணசி தொகுதியில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் இன்று செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகளே உண்மையான மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்கான எடுத்துக்காட்டுகளாகும். முந்தைய அரசுகள் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைகிறதா என கள நிலவரம் தெரியாமல் ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை உருவாக்கினர். ஆனால், பாஜக அரசு பயனாளிகளை சந்தித்து அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன்மூலம், அந்த நலத்திட்டத்தின் பயன்பாடும், அதன் விளைவுகளும் எளிதில் தெரிய வரும் என்றார்.

வாராணசியில் ரூ.12,100 கோடி மதிப்பிலான 29 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT