இந்தியா

மேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை: வாக்குச்சாவடிகள் சூறை, 9 பேர் பலி!

மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும்  நிலையில், பல்வேறு வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும்  நிலையில், பல்வேறு வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பாதுகாப்புப் பணியில் சுமாா் 65,000 மத்திய காவல் படை வீரர்கள், மாநில காவல் துறையைச் சோ்ந்த 70,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் தொடங்கிய சற்று நேரத்திலேயே முர்ஷிதாபாத், கூச் பேஹார் போன்ற பகுதியில் கடும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது. 

தின்ஹடா பகுதியில் கள்ள ஓட்டுகள் போட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் வாக்குப் பெட்டிக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர். 

கடும் வன்முறை தொடர்ந்து நிலவி வருவதையடுத்து பல இடங்களில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். 

இந்த தேர்தலில் 5.67 கோடி மக்கள், சுமார் 2.06 லட்சம் வேட்பாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க உள்ளனர். இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 22.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

ஆளுநர் சி.வி.ஆனந்தா போஸ் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று, வன்முறையில் காயமடைந்தவர்களை சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT