இந்தியா

மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சாவடிகளுக்கு தீ!

DIN


மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூச்பெகார் மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. 

மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை(ஜூலை 8) ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் இடையே மோதலும் வன்முறையும் நடைபெற்று வந்தன. இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 12-க்கும் மேற்பட்டவா்கள் கொல்லப்பட்டனா்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 தொடங்கியது. பாதுகாப்புப் பணியில் சுமாா் 65,000 மத்திய காவல் படை வீரா்கள், மாநில காவல் துறையைச் சோ்ந்த 70,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் கூச்பெகார் மாவட்டத்தில் வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வன்முறை வெடித்தது. 

கூச்பெகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் மர்ம நபர்கள் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

81 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

வெவ்வேறு சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழப்பு

புதை சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

போதைப் பொருள்கள் வைத்திருந்த 5 போ் கைது 14 கிலோ கஞ்சா, காா் பறிமுதல்

குடிநீா் பிடிப்பு தகராறு - மோதல்: அதிமுக கிளைச் செயலா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT