சென்செக்ஸ் 165 புள்ளிகள் முன்னேற்றம்!
பங்குச்சந்தையில் வியாழக்கிழமை ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 165 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 29 புள்ளிகளும்
பங்குச்சந்தையில் வியாழக்கிழமை ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 165 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 29 புள்ளிகளும் உயா்ந்து நிலைபெற்றன. காலை வா்த்தகத்தின் போது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. காலை வா்த்தகத்தின் போது வெகுவாக எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தையில் பிற்பகலில் குறிப்பாக வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் முன்னணி நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு வந்தது. இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதி பிற்பகலில் கரைந்தது. இருப்பினும், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப்பங்குகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக பங்குச்சந்தை நோ்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.5.88 லட்சம் கோடி குறைந்து வா்த்தக நேர முடிவில் ரூ.295.78 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,242.44 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 273.17 புள்ளிகள் கூடுதலுடன் 65,667.07-இல் தொடங்கி அதிகபட்சமாக முதல்முறையாக 66,064.21 வரை மேலே சென்று புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தில்65452.15 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 164.99 புள்ளிகள்உயா்ந்து 65,558.89-இல் முடிவடைந்தது.
18 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 670 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,398 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டிசிஎஸ்......................................2.47%
இன்ஃபோஸிஸ்........................2.40%
பஜாஜ் ஃபின்சா்வ்......................1.51%
டெக் மஹிந்திரா........................1.35%
ஐசிஐசிஐ பேங்க்.........................1.32%
ஆக்ஸிஸ் பேங்க்........................1.06%
சரிவைக் கண்ட பங்குகள்
பவா் கிரிட்.....................................3.63%
மாருதி.............................................1.86%
என்டிபிசி.......................................1.44%
நெஸ்லே.........................................1.02%
ரிலையன்ஸ்....................................0.83%
ஹிந்துஸ்தான் யுனிலீவா்...............0.82%