இந்தியா

தில்லியில் வெள்ளமும் தண்ணியும்!

DIN

பருவ மழை பெய்து வருவதாலும், யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் தலைநகரான தில்லியே வெள்ளத்தில் மிதக்கிறது. தலைநகரின் சில குடிமகன்கள் தண்ணியில் மிதக்கின்றனர்.

வெள்ளத்தில் உடமைகளை இழந்த நிலையில், ஒருகையில் மதுபாட்டில்களுடனும் மறுகையில் மாற்றுத் துணியுடனும் தண்ணீரில் ஒருவர் நடந்துவரும் புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தில்லியில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஹரியாணா மாநிலத்திலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் யமுனை ஆற்றில் அபாயகட்டத்தை மீறி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. 

இதனால், யமுனை ஆற்றங்கரையோர வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிலர் மேடான பகுதிகளில் கூடாரமிட்டுள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி தில்லியில் இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், கார், வேன், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கின. 

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் பலர் இயல்பு வாழ்க்கைய இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டை சூழ்ந்துள்ள வெள்ளத்தில் குதித்து சிலர் குளியல் போடுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

SCROLL FOR NEXT