முகப்பு
இந்தியா

உ.பி.யில் கனமழைக்கு ஒரே நாளில் 14 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் பெய்து கனமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியா

உ.பி.யில் கனமழைக்கு ஒரே நாளில் 14 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் பெய்து கனமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:03 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பெய்து கனமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். 

வடமாநிலங்களில் கடந்த 5 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தில்லி, ஹரியாணா, மத்தியப் பிரேதம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில்,  நேற்று ஒரே நாளில் உ.பியில் மின்னல் தாக்கியதில் 7 பேர், நீரில் மூழ்கி 4 பேர், மேலும் மூவர் மழை தொடர்புடைய சம்பவங்களில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் பாலியகலாவில் அருகில் ஷர்தா நதி அபாய அளவை தாண்டியுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. 

சம்பால், பிஜ்னோர், சஹாரன்பூர், உன்னாவோ, அம்ரோஹா, முசாபர்நகர், காஸ்கஞ்ச் மற்றும் மீரட் ஆகிய மாவட்டங்களில் நேற்று ஒருநாளில் 30 மி.மீ க்கும் அதிகமான மழைப் பதிவாகியுள்ளது. 

மாநிலத்தில் சராசரி அளவான 114 சதவீதத்தை விட, இந்தாண்டு 199.7 மீ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. 18 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 19 மாவட்டங்களில் மிதமான மழையும், 5 மாவட்டங்களில் குறைவான மழையும் பதிவாகியுள்ளது. 

சஹரான்பூர், கௌதம் புத்தா நகர், ஷாம்லி, பாக்பத் மற்றும் முசாபர்நகர் ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தம் 3,763 பேர் வெள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →