முகப்பு
இந்தியா

70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் மீட்பு: ஹிமாசல் முதல்வர்

ஹிமாசலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 70,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தா் சிங் சுகு தெரிவித்துள்ளார்.  

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:03 PM
பகிர்:

ஹிமாசலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 70,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தா் சிங் சுகு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. சுமார் 70,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 500 சுற்றுலாப் பயணிகள் தாமாக முன்வந்து மாநிலத்தில் தங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். 

மாநிலத்தில் இருந்து சுமார் 15,000 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனுடன், பேரிடர் பாதித்த 80 சதவீத பகுதிகளில் மின்சாரம், தண்ணீர் மற்றும் மொபைல் சேவைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை விரைவாக மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பேரிடர் மிகப்பெரியது மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு சுமார் 8,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அப்போது மீட்புப் பணிகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் பல்வேறு அமைப்புகளையும் அவர் பாராட்டினார். 

முழு கட்டுரையைப் படிக்க →