இந்தியா

ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி!

DIN


பிரான்ஸ் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றார். 

பிரான்ஸுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக வியாழக்கிழமை சென்ற த பிரதமா் நரேந்திர மோடி, அதிபா் இமானுவல் மேக்ரானுடன் வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினாா்.

பிரான்ஸ் தேசிய அவைத் தலைவா் ஏயில் ப்ரௌன் பிவெட் மற்றும் செனட் சபை தலைவா் ஜெராா்ட் லாா்ச்சொ் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா்.

ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளின் மதிப்புகளை எடுத்துரைத்து, இருநாட்டு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்த மோடி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு, ஸ்டார்ட்அப் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா-பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும், பிரான்ஸும் ஒன்றாக உள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்தார். 

இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரான்ஸ் தேசிய நாள் கொண்டாடத்திலும் மோடி பங்கேற்றார். 

இந்த நிலையில் பிரான்ஸுக்கான 2 நாள் அரசுமுறைப் பயணங்களை முடித்துக்கொண்டு சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி.

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள மோடி, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹயானை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டின் உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT