இந்தியா

எதிர்க்கட்சிகள் ஆலோசனை: முதல்நாள் கூட்டம் நிறைவு!

பாஜகவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் முதல்நாள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. 

DIN

பாஜகவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் முதல்நாள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. 

நாளை விரிவான ஆலோசனை நடத்தப்படவுள்ள நிலையில், அதற்கான நிகழ்ச்சி நிரல்கள் குறித்து இன்று விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டுநாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய பாஜகவுக்கு எதிராக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி பெங்களூருவிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் (இரவு உணவுடன்) எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர், முதல்வர் மு.க. ஸ்டாலின், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஹேமந்த் சோரன், பகவந்த் மான், லாலு பிரசாத் யாதவ், மெஹ்மூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

சுமார் ஒருமணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற கூட்டத்தில், நாளை விரிவான ஆலோசனை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான நிகழ்ச்சி நிரல்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் முதல்முறை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்திற்கு 16 கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT