கோப்புப்படம் 
இந்தியா

சாதாரண மக்களுக்காக வந்தே பாரத் போன்ற புதிய ரயில்: இந்திய ரயில்வே கரிசனம்

இந்திய ரயில்வேக்கு ஏழை மக்களுக்காகவும் புதிய ரயில்களை உருவாக்க கரிசனம் வந்துள்ளது.

DIN

பணக்காரர்கள் மட்டுமே பயணிக்க முடியும் வந்தே பாரத் ரயில்களை தயாரித்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கி வரும் ரயில்வேக்கு, ஏழை மக்களுக்காகவும் புதிய ரயில்களை உருவாக்க கரிசனம் வந்துள்ளது.

வந்தே பாரத் போன்று புதிய வசதிகளுடன், ஏசி வசதி இல்லாத, படுக்கை வசதிகளைக் கொண்ட சாதாரண விரைவு ரயில்களை உருவாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால், இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏழை, எளிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் புதிய ரயில்கள் கட்டமைக்கப்படவிருக்கின்றன.

அண்மைக்காலமாக, வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் இந்திய ரயில்வே அதிக அக்கறை கொண்டதும், அந்த ரயில்கள் அனைத்தையுமே பிரதமர் மோடியே நேரடியாகச் சென்று கொடியசைத்துத் தொடங்கி வைத்ததும் பேசுபொருளாகியிருந்தது.

இதோ நில்லாமல், ஏழை மக்கள் பயணிக்கும் படுக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, ஏசி வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையையும் இந்திய ரயில்வே அதிகரித்து, மற்றொரு பக்கம் ஏழை மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான், திடீரென இந்திய ரயில்வேக்கு ஏழை மக்கள் மீது கரிசனம் அதிகரித்துள்ளது. ஏசி வசதி இல்லாத சாதாரண ரயில்கள்  அனைத்தும் இரண்டு லக்கேஜ், கார்டு மற்றும் 8 படுக்கை வசதிகொண்ட பெட்டிகளுடன், 12 இரண்டாம் வகுப்பு 3 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுடன் உருவாகவிருக்கிறது. அனைத்தும் ஏசி வசதி இல்லாத பெட்டிகள். இதன் மூலம் தெரிய வந்திருப்பது, இந்த ரயில் முழுக்க முழுக்க சாதாரண மக்களுக்கானது.

இந்த ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படவிருக்கின்றன. வந்தே பாரத் ரயிலை தயாரிக்கும் நாட்டின் ஒரே ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையாக ஐசிஎஃப் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT