இந்தியா

மும்பையில் எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம்!

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் அதுகுறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் அதுகுறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பொருட்டு எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்றது. பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். 

அதன் தொடர்ச்சியாக  எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரு நாள்கள் (ஜூலை 17, 18) நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றன. 

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு 'இந்தியா' - இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணி (INDIA - Indian National Developmental Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் அதுகுறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.

மேலும் கூட்டணியை வழிநடத்த 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் குழு உறுப்பினர்களின் பெயர்கள் மும்பையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 75 லட்சம்

உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் மாயம்: மீட்புப் பணிகள் தீவிரம்

செப்.30-ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர வேண்டும்: ஊழியா்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT