இந்தியா

ராலிஸ் இந்தியாவின் 97 லட்சம் பங்குகளை வாங்கிய டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம்!

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான ராலிஸ் இந்தியாவின் 97 லட்சம் பங்குகளை பிளாக் டீல் மூலம் ரூ.208 கோடிக்கு வாங்கியுள்ளது.

DIN

புதுதில்லி: டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான ராலிஸ் இந்தியாவின் 97 லட்சம் பங்குகளை பிளாக் டீல் மூலம் ரூ.208 கோடிக்கு வாங்கியுள்ளது.

ரூ.1 முகமதிப்பு கொண்ட ஒரு பங்குகை ரூ.215.05 என்ற விலையில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் ராலிஸ் இந்தியாவின் 97 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது.

வேளாண் இடுபொருள் நிறுவனமான ராலிஸ் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பயிர் மற்றும் விதைகளின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில், ராலிஸ் ஜூன் காலாண்டில் நிகர லாபம் ரூ.63 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு அதன் லாபம் ரூ.67 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மொத்த வருவாய் ரூ.867 கோடியிலிருந்து குறைந்து ரூ.765 கோடியானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT