இந்தியா

புவியின் 4-வது சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் - 3!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் நான்காவது சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக இன்று(வியாழக்கிழமை) செலுத்தப்பட்டது.

DIN

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் நான்காவது சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக இன்று(வியாழக்கிழமை) செலுத்தப்பட்டது.

அதற்கு அடுத்தடுத்த நிலைகள் வெற்றிபெறும்பட்சத்தில் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

நிலவின் பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் வடிவமைக்கப்பட்டது. கனரக செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 

அதற்கு அடுத்த நாளில் புவி வட்டப் பாதையின் முதல் நிலையில், அதாவது 173 கிலோ மீட்டா் அருகமை தொலைவிலும், 41,762 கிலோ மீட்டா் தொலைவு தூரத்திலும் உள்ள முதலாவது சுற்றுப் பாதைக்குள் சந்திரயான்-3 உந்தித் தள்ளப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை (ஜூலை 17) இரண்டாவது சுற்றுப் பாதையான 226 கிலோ மீட்டா் அருகமை தொலைவு, 41,603 கிலோ மீட்டா் தொலைவு தூரப் பகுதிக்குள் செலுத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக கடந்த 18 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது சுற்றுப் பாதைக்குள்ளும் இன்று(வியாழக்கிழமை) வெற்றிகரமாக நான்காவது சுற்றுப் பாதைக்குள் செலுத்தப்பட்டது. 

பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் இத்தகவலை தெரிவித்துள்ளது. 

மொத்தம் 5 நிலைகள் உள்ள நிலையில், வருகிற ஜூலை 25 ஆம் தேதி பிற்பகல் 2-3 மணியளவில் 5- வது சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT